பிரபு தேவாவின் ‘பஹிரா’ ட்ரெயிலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Bagheera Trailer Releasing Date Announced
பிரபு தேவாவின் ‘பஹிரா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
’பரதன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், பிரபு தேவா, அமைரா டஸ்ட்யூர், ஜனனி ஐயர், சஞ்சிதா, சாக்சி மற்றும் பலர் நடித்திருக்கும் ‘பஹிரா’ திரைப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், படத்தின் ட்ரெயிலர் அக்டோபர் 8 அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“ சிரிக்கும் ரோஜாக்களுக்காக படைக்கப்பட்ட சைக்கோ ராஜாவாக வலம் வரும் பிரபு தேவா, சைக்கோவாக என்ன செய்திருக்கிறார் என்பதை படம் வரும் போது பாக்கலாம் “