பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியனின் புதிய படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!

Raame Aaandalum Raavane Aaandalum Trailer Released In Net

Raame Aaandalum Raavane Aaandalum Trailer Released In Net

பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி மூலம் பெரிதும் புகழ்பெற்ற ரம்யா பாண்டியன் நடித்திருக்கும் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது.

சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில், இயக்குநர் அரிசில் மூர்த்தி அவர்களின் இயக்கத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன் மற்றும் பலர் நடிக்கும் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் வாங்கியிருக்கும் நிலையில் செப்டம்பர் 24 அன்று வலை தளத்தின் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரெயிலரைப் பார்க்கையில் மண்வாசனை ததும்ப ததும்ப எடுத்திருக்கும் படம் போல தெரிகிறது. வெள்ளையன் கருப்பன் என்ற காளைகளை சுற்றி நகரும் படம் போலவும் ட்ரெயிலரில் உள்ள சீன்கள் விளக்குகின்றன. எதுவாக இருந்தாலும் திரைக்கதையைப் பொறுத்தே படத்தை முடிவு செய்ய முடியும் என்ற நிலையில் படம் வெளியானதும் பார்த்துக் கொள்ளலாம்.

“ ஜோக்கர் படத்திற்கு பிறகு அது போலவே மற்றுமொரு கிராமத்து கேரக்டரை எடுத்து நடித்திருக்கும் ரம்யா பாண்டியன், இதில் என்ன செய்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். படம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் “

About Author