தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது மண்டல வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் ஆகஸ்ட் 29 மற்றும் ஆகஸ்ட் 30-களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என்று சிவப்பு கம்பள எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்.
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 29 மற்றும் ஆகஸ்ட் 30 தேதிகளில் பரவலாக அதீத மழை பெய்யக்கூடும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்திக்கொள்ளவும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஒரு சில ரெட் அலர்ட் மாவட்டங்களை அடையாளப்படுத்தியும் சொல்லி இருக்கிறது. முக்கியமாக அதில் நீலகிரி,கோவை,கோயம்புத்தூர்,தென்காசி ஆகிய மாவட்டங்கள் இடம் பெறுகின்றன.
” பரவலாக அதீத கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருந்தாலும் மேற்கூறிய மாவட்டங்கள் ரெட் அலர்ட்டில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது “