ரெஜினா கேசன்ட்ராவின் ‘சூர்ப்பனகை’ படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!

Regina Casandra Soorpanagai Trailer Released In Net

Regina Casandra Soorpanagai Trailer Released In Net

ரெஜினா கேசன்ட்ரா அவர்கள் லீடிங் ரோலில் நடிக்கும் ’சூர்ப்பனகை’ படத்தின் ட்ரெயிலர் படக்குழுவினால் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளிடப்பட்டது.

’ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ்’ ராஜ் சேகர் வர்மா அவர்களின் தயாரிப்பில், கார்த்திக் ராஜா இயக்கத்தில் ரெஜினா கேசன்ட்ரா, அக்‌ஷாரா கவுடா, மன்சூர் அலிகான், மைக்கேல், ரவி ராஜா, கவுசிக் யோகி மற்றும் பலர் நடிக்கும் ‘சூர்ப்பனகை’ படத்தில் ட்ரெயிலர் படக்குழுவினால் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளிடப்பட்டது.

ட்ரெயிலரைப் பார்த்தவரையிலும் கொலை, பேய், இன்வெஸ்டிகேசன், ப்ளாஸ்பேக் என்ற நான்கு டெம்ப்ளேட்டுகளை மட்டுமே இப்படம் கொண்டதாக வெளிப்படையாக தெரிகிறது. அதில் இருக்கும் திரைக்கதை தான் சுவாரஸ்சியம் என்னும் போது பார்க்கலாம் திரைப்படம் வெளிவருகையில் கார்த்திக் ராஜா என்ன செய்திருக்கிறார் என்று!

“ ஹீரோயின்கள் லீடிங் ரோலில் நடிக்கும் சில படங்கள் ஹிட் அடித்து வரும் நிலையில், நயன் தாரா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு பிறகு ரெஜினா கேசன்ட்ராவும் அந்த பாணியை கடைப்பிடித்து இருக்கிறார். ஹிட் அடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் “

About Author