ட்ரென்டிங்கில் ‘டிக்கிலோனா’ படத்தின் இரண்டாவது டிரைலர்

சந்தானம், யோகி பாபு, மொட்ட ராஜேந்தர், முனிஸ்காந்த், ஆனந்த்ராஜ் என்று மிகப்பெரிய சிரிப்பு பட்டாளங்களே களம் இறங்கும் டிக்கிலோனா படத்தின் இரண்டாவது ட்ரெயிலர் நேற்று இணையத்தில் வெளியான நிலையில் இன்று ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. காமெடி கலந்த அறிவியல் பூர்வ படமாக ட்ரெயிலரை பார்க்கும் போது தெரிந்தாலும் படம் வெளி வந்தாலே அதைப்பற்றி முழுமையாக விவரிக்க முடியும்.

கார்த்திக் யோகி இயக்கியிருக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் கோபிநாதன்,வினு,வீர சங்கிலி என மூவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். முக்கியமாக படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார் என்பது படத்திற்கு கூடுதல் வலு. காமெடியனாய் எப்பொழுதோ தன்னை நிரூபித்து விட்ட சந்தானம் அவர்கள் நடிகனாய் எந்த படத்திலும் அவ்வளவாய் தன்னை நிரூபித்து விடவில்லை எனினும் இந்த படத்தில் நிரூபிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம்.

“ செப்டம்பர் 10 அன்று டிக்கிலோனா ZEE5-இல் ப்ரீமியர் ஆகும் என்பதை ட்ரெயிலரிலேயே தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கும் நிலையில் சந்தானம் என்ன செய்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் “

About Author