இனி கடைகளில் நிறுவனங்களில் பணியாளர்களுக்கு இருக்கை கட்டாயம் – தமிழக அரசு
நாள் முழுக்க நின்றே நின்று வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு இனி இருக்கை வசதி கட்டாயம் என்று தமிழக அரசு சட்ட திருத்த வடிவம் ஒன்றை சட்ட பேரவையில் தாக்கல் செய்துள்ளது.
தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தமிழக சட்ட பேரவையில் ஒரு சட்ட திருத்த மசோதோ ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது இனி கடைகளில் நிறுவனங்களில் நாள் முழுதும் நின்று கொண்டு வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு இருக்கை வசதியை கட்டாயப்படுத்தி சட்டமுன்வடிவம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் -1947 இதற்கு தக்கவாறு திருத்தம் செய்யப்பட்டு வெகு விரைவில் இது தமிழகம் முழுக்க அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசின் தொழிலாளர் துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானதுமே அது பெருவாரியான பிரபலங்களிடமும் இருந்தும், சாதாரண பணியார்களிடம் இருந்தும் ஏகபோக வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.
“ ஜவுளி கடைகளிலும் சாதாரண நிறுவங்களிலும் 12 மணிநேரத்திற்கும் மேலாக நின்று கொண்டே நம்மை அனுசரிக்கும் சாதாரண பணியாளர்களுக்கு இருக்கைகளை கட்டாயம் ஆக்கி இருப்பது சமூக ஆர்வலர்களிடமும் அன்றாட பணியாளர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது “