ஓடிடி தளத்தில் வெளியாகும் சாணிக்காயிதம்
இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. ராக்கி படத்தை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தான் இப்படத்தையும் இயக்குகிறார். இந்த நிலையில் தான் இப்படத்தின் வெளியீடு உரிமையை பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் வாங்கி இருக்கிறது.
இயக்குநராக இருந்த செல்வராகவன் ஒரு முழுநீளப்படத்தில் முதல் முதல் நடிகராக நடிக்கும் படம் என்றால் அது சாணிக்காயிதம் தான். மேலும் செல்வராகவன் நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திலும் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி அடிக்கடி இயக்குநர் செல்வராகவனை நடிகனாகவும் திரையில் காணலாம் என்று செல்வராகவன் தரப்பு தெரிவித்து வருகிறது.
” திரையரங்குகள் திறந்த பின்னும் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ஓடிடி-யை நாடுவது திரையரங்க உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குறைந்த பட்ச லாபம், அதிகபட்ச நஷ்டம் இரண்டையும் ஈடுகட்டவே பெரும்பாலான படங்கள் தயாரிப்பாளர்களால் ஓடிடி தளங்களுக்கு விற்கப்பட்டு வெளியாகுவதாகவும் சினிமாவில் ஒரு சில தரப்பினர் தெரிவித்து வருகின்றனர் “