நமது கலாசாரத்தை பாதுகாக்கிறது ஆர் எஸ் எஸ் அமைப்பு!
Singer Shankar Mahadevan Praises RSS Idamporul
நமது கலாசாரத்தை ஆர் எஸ் எஸ் அமைப்பு பாதுகாப்பதாக பாடகர் சங்கர் மகாதேவன் ஆர் எஸ் எஸ் மேடையில் பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடி இருக்கும் பாடகர் சங்கர் மகாதேவன், நாக்பூரில் நடைபெற்ற ஆர் எஸ் எஸ் விழா ஒன்றில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். அந்த மேடையில் அவர் பேசும் போது ‘ஆர் எஸ் எஸ் அமைப்பு நமது கலாசாரத்தை பாதுகாக்கிறது, அவ்வமைப்பு உழைக்கும் அளவிற்கு வேறு எந்த அமைப்பும் உழைக்கவில்லை, அதற்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்’ என பேசி இருந்தது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
“ பாடகர் சங்கர் மகாதேவனின் இந்த பேச்சுக்கு ஒரு பக்கம் ஆதரவும் , இன்னொரு பக்கம் எதிர்ப்பும் என ட்விட்டரில் விவாதங்கள் சூடு பிடித்துக் கொண்டு இருக்கிறது “