ட்ரெண்டிங்கில் ‘டாக்டர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!
Sivakarthikeyan Doctor Trailer Trending In Social Media
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் நேற்றி ரிலீஸ் ஆகியிருந்த நிலையில் தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் அடிக்க துவங்கி உள்ளது.
இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று வெளியான ட்ரெயிலரும் உலகம் முழுக்க ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இது வரை டாக்டர் ட்ரெயிலர் 4 மில்லியன் பார்வையாளர்களையும், 3,55,000 லைக்குகளையும் அள்ளி உலகம் முழுக்க சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
“ ட்ரெயிலரில் சிவகார்த்திகேயன் ஸ்கோர் செய்யும் அளவிற்கு, வினய்யும் ஸ்கோர் செய்கிறார். பேக்ரவுன்ட் பிஜிஎம்மில் அனிருத் பின்னி பிடலெடுத்திருக்கிறார். ஆக மொத்தம் இயக்குநர் நெல்சனின் ’டாக்டர்’ திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் தர வாய்ப்பிருக்கிறது. “