ஸ்பெயின் எரிமலை வெடிப்பு: நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை தீயிற்கு இரையாக்கிய தீப்பிழம்புகள்!
ஸ்பெயின் நாட்டில் உள்ள லா பால்மா எனப்படும் தீவில், ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் வெளியான தீப்பிழம்புகள், கிட்ட தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை தீயிற்கு இரையாக்கி உள்ளன. 5000-ற்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பலரும் தங்களது வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
கிட்ட தட்ட 85,000க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் அந்த தீவில் சாலைகள், வீடுகள், கடைகள், நிறுவனங்கள் என்று எங்கு பார்த்தாலும் தீப்பிழம்புகளும், வெண்புகைகளும் ஆர்ப்பரித்து வருகின்றன. சுற்றுலாவிற்கு வந்த வெளிநாட்டினரும் லா பால்மா தீவில் தவித்து வரும் நிலையில் அங்கு பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து இந்த இயற்கை சீற்றத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.
“ கடந்த 50 ஆண்டுகளில் லா பால்மா தீவில் நடை பெற்றிருக்கும் முதல் எரிமலை சீற்றம், இயற்கை மனிதனை சீண்ட ஆரமபித்தால் அதன் விளைவுகளை அதுவே தடுத்தாலே தவிர யாராலும் அதை தடுத்திட முடியாது “