தோனி டீசல் இன்ஜின் போல, அவர் ஓடிக் கொண்டே இருப்பார் – டிவில்லியர்ஸ்
AB De Villiers About CSK And MS Dhoni Idamporul
மகேந்திர சிங் தோனி டீசல் இன்ஜின் போல, அவர் ஓடிக் கொண்டே இருப்பார் என டிவில்லியர்ஸ் கூறி இருப்பது வைரலாகி வருகிறது.
தோனியிடம் யாரும் ஓய்வு குறித்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை, அவர் டீசல் இன்ஜின் போல ஓடிக் கொண்டே இருப்பார். அவரின் உடல் தகுதிக்கு இன்னும் எத்தனை சீசன் வேண்டுமானாலும் விளையாடலாம். அவர் தலைமையிலான சிஎஸ்கேவை வீழ்த்துவது என்பது ஒவ்வொரு அணிக்குமே மிகக்கடினமானதாகவே இருக்கும் என தென் ஆப்பிரிக்காவின் அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ், தோனி குறித்தும், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி குறித்தும் கூறி இருக்கிறார்.
“ தோனி என்னும் பெயர் ரசிகர்களின் மனதில் எப்போதும் இருப்பது போல, அவரை எதிர்த்து ஆடிய கிரிக்கெட்டர்களின் மனதிலும் இருக்கிறது என்பது தான் அவர் இங்கு செய்த மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது “