களத்தில் ஆக்ரோஷம் காட்டிய கோஹ்லி, அதிருப்தி அடைந்த லக்னோ வீரர்கள்!
Virat Kohli Fight With LSG Players Idamporul
நேற்றைய லக்னோ மற்றும் பெங்களுரு இடையிலான லீக் போட்டியில், கோஹ்லி காட்டிய அக்ரஷனால் களம் முழுக்க முழுக்க ஆக்ரோஷமாகவே இருந்தது.
முன்னதாக லக்னோ மற்றும் பெங்களுரு ஆடிய லீக் போட்டியில் லக்னோ திரில்லர் வெற்றியை ருசித்து களத்தில் பயங்கரமாக ஆக்ரோஷத்தை காட்டி இருந்தது. இதை நினைவில் வைத்துக் கொண்டு கோஹ்லி நேற்றைய தினம் முழுக்க முழுக்க ஆக்ரோஷம் காட்டி காம்பீர் உட்பட லக்னோவின் அனைத்து வீரர்களையும் திணறடித்தார்.
“ களத்தில் விராட் கோஹ்லியின் ஒவ்வொரு அசைவிற்கும் விசில் பறந்தது, வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல, ஒரு வீரரையும் விட்டு வைக்காமல் விராட் தனது ஆக்ரோஷத்தை கொட்டி தீர்த்தார் “