இதற்கு முன்னர் அணியில் நண்பர்கள் இருந்தனர், தற்போது சக வேலையாட்கள் இருக்கிறார்கள் – அஷ்வின்
Ashwin Open Talk After WTC Defeat Idamporul
இதற்கு முன் அணியில் நண்பர்கள் இருந்தனர், தற்போது சக வேலையாட்கள் இருக்கிறார்கள் என அஷ்வின் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னர் இந்திய அணியில் அனைவரும் எனக்கு நன்பர்களாக இருந்தனர். தற்போது ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சக வேலையாட்கள் போல இருக்கின்றனர். யாரிடமும் ஒன்ற முடியவில்லை. ஒரு அணியாக இந்திய அணி செயல்பட முடியாததற்கு இது கூட காரணமாக இருக்கலாம் என ரவிச்சந்திரன் அஷ்வின் கூறி இருக்கிறார்.
” இந்திய அணியில் தற்போது இருக்கும் சீனியர் வீரரான அஷ்வினே இவ்வாரு கூறி இருப்பது இந்திய அணியின் நிலைமையை ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது “