இடம்பொருள் கணிப்பு | ஆசிய கோப்பையை வெல்ல போகும் அணி எது?
சூப்பர் 4 பிரிவில் வங்க தேசம் ஏற்கனவே எலிமினேட் ஆகி விட்ட நிலையில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் அணிகளினுள் எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது என்பதை பார்க்கலாம்.
பாகிஸ்தான், இலங்கை என இரு அணிகளையும் தோற்கடித்து விட்டு இறுதிப் போட்டிக்குள் சென்று உட்கார்ந்து இருக்கிறது இந்திய அணி. இலங்கை பாகிஸ்தான் இடையிலான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து விட்டு இந்தியா வெல்ல வாய்ப்பு இருக்கிறது.
இலங்கை அணியிடம் ஒரு கன்சிஸ்டன்சி இல்லை, பாகிஸ்தான் அணியிடம் பலம் வாய்ந்த பவுலிங் யூனிட் இருந்தாலும் கூட, பேட்டிங்கில் சொதப்புகிறது. இந்தியா பவுலிங் மற்றும் பேட்டிங்கில் இந்த இரு அணிகளை காட்டிலும் சற்றே பெட்டராக செயல்படுவதால் இந்திய அணி கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
” உலககோப்பைக்கு முன் ஒரு வெற்றிக்கோப்பையுடன் இந்தியா நுழைந்தால் ரசிகர்களுக்கும் வீரர்களுக்கு ஒரு பாசிட்டிவ் வைப் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று “