Asia Cup Final | INDW vs SLW | ‘8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா’
Asia Cup Final INDW vs SLW India Won By 8 Wickets
ஆசிய கோப்பை இறுதி போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை தன்வசப்படுத்தி இருக்கிறது இந்திய மகளிர் அணி.
முதலில் ஆடிய இலங்கை அணி வரிசையாக விக்கெட்டுக்களை பறிகொடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 65 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி ஸ்மிருதி மந்தனா 51(25) அவர்களின் அதிரடியில் 8.3 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக அடைந்து கோப்பையையும் தன்வசப்படுத்தியது.
“ மூன்று ஓவர்கள் வீசி 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய ரேனுகா சிங் ஆட்டநாயகியாக தேர்ந்து எடுக்கப்பட்டார். 8 ஆட்டத்தில் 13 விக்கெட்டுக்கள் எடுத்து கலக்கிய தீப்தி சர்மா தொடர் நாயகியாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “