Asia Cup | Final | ’கோப்பையை வெல்லுமா தசூன் சாணக்கா தலைமையிலான இலங்கை அணி’
Asia Cup Final Srilanka Facing Pakistan Today
ஆசிய கோப்பையின் இறுதி போட்டியில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, தசூன் சாணக்கா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான ஆசிய கோப்பையின் இறுதி போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. சூப்பர் 4-யில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கும் இலங்கை அணி கோப்பையுடன் இலங்கைக்கு செல்லுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
“ பாகிஸ்தானுக்கு பெரும் தலைவலியாக இருப்பது பாபர் ஆசமின் பார்ம் தான். அவர் மீண்டு விட்டால் அணியும் மீண்டு விடும். இது போக பீல்டிங்கிலும் தொடர் சொதப்பல். இந்த இரண்டையும் களைந்து விட்டால் பைனலில் கோப்பைக்கான வாய்ப்பு 50-50 ஆக அமையும் “