Asia Cup | BAN vs SL | ‘நாகினிகளை பழி தீர்த்த இலங்கை சிங்கங்கள்’
Asia Cup Match 5 SL VS BAN Srilanka Won By 2 Wickets
ஆசிய கோப்பையின் ஐந்தாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இலங்கை அணி.
முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இலங்கை அணி ஆட்டத்தை கடைசிவரை திரில்லர் படம் போல எடுத்துச் சென்று ஒரு பாசிட்டிவ் கிளைமேக்ஸ்சை தனக்கு சாதகமாக்கி கொண்டு வெற்றி பெற்று சூப்பர் 4 கட்டத்திற்குள் நுழைந்தது.
“ இலங்கை அணி சேஸ் செய்த இரண்டாவது அதிகபட்ச இலக்கு இதுவாகும். கடைசியாக வந்த டிபட்டன்ட் அசிதா பெர்னான்டோ பினிஷ் செய்ததை இலங்கை அணியினரே எதிர்பார்க்கவில்லை. மொத்தத்தில் ஒரு ராவான மேட்ச் “