ஆசிய விளையாட்டு கால்பந்து போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா!
Asian Games Indian Football Team Registered Their First Victory Against Bangladesh Idamporul
ஆசிய விளையாட்டு கால்பந்து போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது இந்திய கால்பந்து அணி.
ஆசிய விளையாட்டு கால்பந்து போட்டியில் குரூப் A பிரிவில் இடம்பெற்று இருக்கும் இந்திய அணி முதல் போட்டியில் சீனாவிற்கு எதிராக 1-5 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்து இருந்தது. இந்தநிலையில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரில் நீடிக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறது.
பல்வேறு பிரிவுகளாக சீனாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டிகள் வரும் அக்டோபர் 8 வரை நடைபெற இருக்கிறது. என்ன தான் பல்வேறு பிரிவுகளில் இந்தியா ஜொலித்தாலும் கூட, கால்பந்தில் ஏதாவது உலக அளவில் சாதித்திட வேண்டும் என்பதே இந்திய கால்பந்து ரசிகர்களின் ஆசை.
” சுனில்சேத்ரி தலைமையிலான இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டுகளில் தங்கத்தை பெற்று இந்திய ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிடுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “