Asian Games | QF 1 | ’நேபாளத்தை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா’
Asian Games QF 1 IND VS NEP India Won By 23 Runs Idamporul
ஆசியன் கேம்ஸ்சின் முதலாவது காலிறுதியில் நேபாளத்தை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது ருதுராஜ் தலைமையிலான இந்திய அணி.
முதலில் ஆடிய இந்திய அணி ஜெஸ்வால் 100(49) மற்றும் ரிங்கு சிங் 37(15) அவர்களின் அதிரடியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய நேபாள் அணியும் அதிரடியைக் காட்டினாலும் கூட சீரிய இடைவெளியில் விக்கெட்டுக்கள் சரிந்ததால் 179 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
“ ருதுராஜ் தலைமையில் இந்திய அணி காலிறுதியில் தனது முதல் வெற்றியை ருசித்து இருக்கிறது. அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று தங்கத்தை உறுதி செய்யுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் “