Asian Games | SF 1 | ‘வங்க தேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா’
ஆசியன் கேம்ஸ்சின் முதலாவது அரையுறுதியில் வங்க தேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இந்திய அணி.
முதலில் ஆடிய வங்க தேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை சீக்கிரம் பறிகொடுத்தாலும் கூட, ருதுராஜ் 40(26) மற்றும் திலக் வர்மாவின் 55(26) அதிரடியால் 9.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப் பிடித்தது.
“ தங்கத்தை அடைய இன்னும் ஒரு போட்டி தான் மிச்சமிருக்கிறது. ருதுராஜ் தலைமையில் இந்திய அணி அச்சாதனையை நிகழ்த்துமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “