ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் ஆன்ட்ரியூ சைமன்ட்ஸ் கார் விபத்தில் மரணம்!
Former Australian All Rounder Andrew Symonds Died In Car Crash
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சைமன்ட்ஸ் (46) கார் விபத்தில் மரணம் அடைந்து இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக அறியப்படுபவர் ஆன்ட்ரியூ சைமன்ட்ஸ் (46). பவுலிங், பேட்டிங் என்று இரண்டிலும் அக்காலத்தில் ஆஸ்திரேலிய அணியின் தூணாக விளங்கியவர். இவர் நேற்று நடந்த கார் விபத்து ஒன்றில் மரணம் அடைந்து இருக்கிறார். இது கிரிக்கெட் உலகில் சோக அலையை உருவாக்கி இருக்கிறது.
“ தற்போது தான் ஷேன் வார்னே அவர்களின் மரணம், உலக கிரிக்கெட் ரசிகர்களின் மனதை உலுக்கி இருந்தது. தற்போது சைமன்ட்ஸ் தனது 46 ஆவது வயதில் கார் விபத்தில் மரணம் அடைந்து இருப்பது ரசிகர்களிடையே சோக அலையை ஏற்படுத்தி இருக்கிறது “