Australian Open | ’பத்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச் ‘
Djokovic Becomes Champion In Australian Open 2023 Idamporul
ஆஸ்திரேலியன் ஓபனில் ஸ்டெபனோஸ்சை வீழ்த்தி 10 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்.
ஆஸ்திரேயன் ஓபன் இறுதிப் போட்டியில் கீரிஸ் வீரர் ஸ்டெபனோஸ்சை நேர் செட்களில் வீழ்த்தி பத்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறார் செர்பியாவின் ஜோகோவிச். இந்த வெற்றியின் மூலம் நடாலின் அதிக கிராண்ட்ஸ்லாம் சாதனையை சமன் செய்ததோடு மட்டும் இல்லாமல் தரவரிசையில் நம்பர் 1 இடத்தையும் பிடித்து இருக்கிறார்.
“ 35 வயது ஆகும் ஜோகோவிச் 2 மணி நேரம் 56 நிமிடங்கள் சளைக்காமல் விளையாடி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்று இருக்கிறார் “