அனைத்து பார்மட்களிலும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறார் பாபர் ஆசம்!
Babar Azam Step Down From All Format Captaincy Idamporul
அனைத்து பார்மட்களிலும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசம் அறிவித்து இருக்கிறார்.
பாகிஸ்தான் அணி உலககோப்பையில் லீக் போட்டியோடு வெளியேறியதை அடுத்து, கேப்டன் பாபர் ஆசம் அவர்களை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வந்தனர். இந்த நிலையில் அனைத்து பார்மட்களிலும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசம்.
“ ஒரு பக்கம் பாபர் ஆசம் இந்த உலககோப்பையில் கேப்டனாகவும் பிளேயராகவும் சிறப்பாக செயல்படவில்லை என்ற கருத்து நிலவி வந்தாலும் கூட, அனைத்து பார்மட்களிலும் பாகிஸ்தான் அணியை புதிய உச்சம் தொட வைத்தவர் பாபர் ஆசம் என்று கூறினால் மிகையாகாது “