டி20 உலக கோப்பை | ’சூப்பர் 12க்கு அதிரடியாக தகுதி பெற்ற பங்களாதேஷ்’
Bangladesh Cricket Team Qualified For Super 12 In T20 World Cup 2021
டி20 உலககோப்பை தகுதிச் சுற்றில் பப்புவா நியூ கினியா அதிரடியாக வென்று சூப்பர் 12க்கு தகுதி பெற்று இருக்கிறது பங்களா தேஷ் அணி.
முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 181 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பப்புவா நியூ கினியா அணி, அடுத்தடுத்து 10 விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 12-க்குள் அடி எடுத்து வைத்திருக்கிறது பங்களாதேஷ் அணி.
பங்களாதேஷ் சார்பில் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கில் 46(37) ரன்களும், பவுலிங்கில் நான்கு ஓவர்கள் மட்டுமே வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுக்களையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
“ புலிக்குட்டிகள் முதல் போட்டியில் தோற்று இருந்த போது, அடுத்தடுத்த போட்டிகளில் சுதாரித்து ஆடி ஒரு வழியாக சூப்பர் 12க்கு தகுதி பெற்று இருக்கிறது “