டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

டி20 உலக கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

விராட் கோஹ்லி (C), ரோஹிட் சர்மா (VC), கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, ராகுல் சஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரீட் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகம்மது சமி, ரிஷப் பண்ட் (WK), இஷான் கிஷன் (WK) ஆகியோர் பிசிசிஐ அறிவித்த அதிகாரப்பூர்வ பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் நடராஜன் அணியில் இடம் பெறாதது ஒரு பக்கம் ஏமாற்றம் அளித்தாலும், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு டி20 அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினைப் பார்ப்பது இன்னொரு பக்கம் மகிழ்ச்சி அளிப்பதாய் உள்ளது. பலம் வாய்ந்த ஒரு அணியையே நம் பக்கம் வைத்திருந்தாலும், டி20 என்றாலே கதகளி ஆடும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளுக்கு வகுக்கும் சிறந்த டாக்டிக்ஸ் மட்டுமே நம்மை வெற்றிப்பாதைக்கு அளித்து செல்லும்.

அக்டோபர் 17-இல் தொடங்கும் போட்டியானது நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. இப்போட்டிகள் முறையாக துபாய், ஓமன், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நான்கு இடங்களில் நடைபெற உள்ளதாக இன்டர்நேசனல் கிரிக்கெட் கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது.

“ ஐபிஎல், ஐபிஎல் முடிஞ்சதும் டி20 உலக கோப்பை என்று வரிசையாக வான வேடிக்கை காத்திருக்கிறது கிரிக்கெட் ரசிகர்களுக்கு. இன்னும் கொஞ்ச நாளுக்கு இந்த அம்மாக்களுக்கு சீரியல் பார்ப்பதற்கு ரிமோட் கிடைக்காது “

About Author