18 வயதில் அமெரிக்க ஓபன் பட்டம், சாதித்த எம்மா ரடுகானு!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் 18 வயதே ஆன எம்மா ரடுகானு, கனடாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை லேலா அன்னியை வீழ்த்தி அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் பதினெட்டு வயதே ஆன பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு, கனடா வீராங்கனை லேலா அன்னியை எதிர்கொண்டார். விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4,6-3 என்ற நேர்செட் கணக்கில் லேலா அன்னியை வீழ்த்தி எம்மா ரடுகானு அமெரிக்க ஓபன் பட்டத்தை தன் வசப்படுத்திக் கொண்டார்.
இதுவரை தகுதி சுற்றுப்போட்டிகளில் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்த எம்மா ரடுகானு, அமெரிக்க ஓபனைக் கைப்பற்றியதன் மூலம், தகுதிப்போட்டிகளில் மட்டும் விளையாடி அமெரிக்க ஓபனை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெருகிறார். உலக தர வரிசையில் 150-ஆவது இடத்தில் இருக்கும் பிரிட்டன் வீராங்கனையான எம்மா ரடுகானு அமெரிக்க ஓபனைக் கைப்பற்றி இருப்பது டென்னிஸ் உலகையே பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் 44 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டன் வீரர் ஒருவர் உலகமேடையில் கிராண்ட்ஸ்லாம் வெல்வது இந்த அமெரிக்க ஓபன் போட்டியின் மூலம் தான். கடைசியாக 1977-இல் பிரிட்டன் வீரர் விர்ஜினியா வேட் விம்பிள்டனின் கிராண்ட்ஸ்லாம் வென்றிருந்தார். அதற்கு பிறகு 44 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டனுக்கு கிராண்ட்ஸ்லாம் என்னும் பெருமையை பெற்றுத் தந்திருக்கிறார் எம்மா ரடுகானு.
“ இரண்டு இளம் பதின்ம சிங்கங்கள் அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் மோதிக் கொண்டது இதுவே முதல் முறையாகும். மேலும் தகுதிப்போட்டி மட்டுமே விளையாடிய ஒரு வீராங்கனை அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் வெல்வதும் இதுவே முதல் முறை ஆகும். வாழ்த்துக்கள் பதின்ம சிங்கம் எம்மா ரடுகானு “