கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

நேற்று நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 50 வருடங்களுக்கு பிறகு ஓவல் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றிருந்தது. இந்த சாதனையோடு பும்ராவும் ஒரு சாதனையை ஓவல் டெஸ்ட்டில் நிகழ்த்தி இருந்தார்.

இதுவரை கபில்தேவ் அவர்கள் 25 போட்டிகள் விளையாடி 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்தது. நேற்று நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டு விக்கெட்டுக்களை பும்ரா அவர்கள் வீழ்த்தியதன் மூலம் 24 போட்டிகளில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்தி புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். இதன் மூலம் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பெறுகிறார் ஜஸ்ப்ரீட் பும்ரா.

ஓரு காலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் என்றாலே ஸ்ட்ம்ப் டு ஸ்டம்ப் வீசத்தெரியாதவர்கள் என்று உலக கிரிக்கெட் அரங்கு நம் பவுலர்களை மட்டம் தட்டிக்கொண்டிருக்கும். பெரும்பாலும் பேட்ஸ்மேன்களையும் ஸ்பின்னர்களையும் மட்டுமே நம்பி அணி களத்தில் இறங்கும். அதை முற்றிலும் மாற்றிய ஒரு பவுலர் தான் பும்ரா. ஒரு ஓவருக்கு ஆறு பந்துகளையும் ஸ்டம்புகளை நோக்கி வீச சொன்னால் அசால்ட்டாக வீசுவார்.

“ இந்திய அணியின் யார்க்கர் நாயகன் பும்ரா, இன்னும் பல போட்டிகள் விளையாடி இந்திய அணியின் பல வெற்றிக்கு உறுதுணையாக நிற்கவேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் வேண்டுகோள் “

About Author