ட்விட்டரில் 10 மில்லியன் பாலோவர்களை எட்டியது சிஎஸ்கே!
Chennai Super Kings Is The First Team Having 10 Millions Followers In Twitter Idamporul
ஐபிஎல்-லின் ஆண்டை அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டரில் 10 மில்லியன் பாலோவர்ஸ்களை எட்டி இருக்கிறது.
ஐபிஎல் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டு இருக்கும் சிஎஸ்கே அணி, ட்விட்டரில் 10 மில்லியன் பாலோவர்ஸ்களை எட்டி இருக்கிறது. இதன் மூலம் ஐபிஎல் அணிகளிலேயே அதிக பாலோவர்ஸ்சை ட்விட்டரில் கொண்ட அணி என்ற பெருமையை பெறுகிறது சிஎஸ்கே.
” 14 சீசன்கள், 12 ப்ளே ஆஃப்கள், 10 பைனல்கள், 5 கோப்பைகள், 2 சாம்பியன் டிராபி, ஒரே ஒரு தலைவன் தோனி என்று கம்பீரமாக நிற்கும் சென்னை அணிக்கு உலகளாவிய அளவில் இவ்வளவு பெரிய மஞ்சள் படை இருக்கிறது என்றால் அதில் ஒன்றும் பெரிய ஐயமில்லை “