தொடர்ந்து இரு தோல்விகள், கேப்டன்சியில் சொதப்பும் ஹர்திக் பாண்டியா?
மும்பை அணி இந்த ஐபிஎல் 2024 சீசனை இரண்டு தொடர் தோல்விகளுடன் துவங்கி இருக்கிறது. இதற்கு காரணம் கேப்டன்சியில் சிறப்பாக செயல்படாத ஹர்திக் பாண்டியா என்றே கூறப்படுகிறது.
குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை, அதிக தொகை கொடுத்து மும்பைக்கு இழுத்து, கேப்டன் பொறுப்பையும் அவரின் கையில் கொடுத்தது. முதலில் இந்த முடிவே தவறு என பலரும் மும்பை நிர்வாகத்தை கடுமையாக சாடி வந்தனர். அணிக்கு 5 கோப்பை வாங்கி கொடுத்த ரோஹிட்டை நீக்கி விட்டு ஹர்திக்கை அவசரம் அவசரமாக பொறுப்பில் ஏற்றுவது என்பது சரியாகாது என பலரும் கூறி வந்த போதும் கூட மும்பை நிர்வாகம் ஹர்திக்கை பொறுப்பில் ஏற்றி ரோஹிட்டை களங்கப்படுத்தியது.
இந்த நிலையில் ஹர்திக் தலைமையில் ஆடிய முதல் இரண்டு போட்டிகளிலுமே மும்பை படுதோல்வி அடைந்து மும்பை ரசிகர்களை வெகுவாக ஏமாற்றி இருக்கிறது. இதனால் ஹர்திக் பாண்டியா மும்பை ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களை பெற்று வருகிறார். ஒரு சரியான பிளேயிங் 11 -யை எடுப்பதில்லை, சரியான கலவையில் பவுலிங்கை மாற்றுவதில்லை, 278 ரன்கள் டார்கெட் இருக்கும் போது, ஒவ்வொருவரும் 200 -க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக்ரேட்டில் ஆடிக் கொண்டு இருக்கும் போது, ஹர்திக் 24(20) பந்துகளில் என ஆடியது நேற்றைய தோல்விக்கு காரணமாக கருதப்படுகிறது.
“ தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் மும்பை லீக் போட்டியிலேயே வெளியேறு விடும் என ரசிகர்கள் மும்பை நிர்வாகத்தை கடுமையாக சாடி வருகின்றனர். ஹர்திக்கை அணியில் எடுத்தது என்னவோ நல்ல முடிவு தான், ஆனால் ரோஹிட் இருக்கும் போது ஹர்திக்கை தலைமைப் பொறுப்பிற்கு ஏற்றிய மும்பை நிர்வாகத்தின் மீது தான் ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர் “