’தோனி இல்லையேல் சிஎஸ்கே இல்லை’ – சிஎஸ்கே தலைமை திட்டவட்டம்
’தோனி இல்லையேல் சிஎஸ்கே இல்லை’ என சிஎஸ்கே அணியின் தலைமையும் திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது.
ஏற்கனவே தோனி, அடுத்த ஆண்டும் சிஎஸ்கேவிற்காக விளையாட ஆர்வப்படுவதை சூசகமாக தெரிவித்திருந்த நிலையில், சிஎஸ்கேவின் தலைமையும் ‘தோனி இல்லையேல் சிஎஸ்கே இல்லை’ என்ற கோட்பாட்டை திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் அடுத்த வருடமும் சிஎஸ்கேவின் தலைமை தோனி என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
“ தோனியும் அறிவித்துவிட்டார், சிஎஸ்கேவின் தலைமையும் தோனியை விடுவதாய் இல்லை என்னும் போது, 2022 இன் ஐபிஎல்லி-லும் நம்ம தல தோனியை விசில்களுடன் வரவேற்கலாம் “