சிஎஸ்கே நட்போடு சேர்த்து ஒவ்வொரு வீரருக்கும் ஒரு சுதந்திரத்தை கொடுக்கிறது – டிவில்லியர்ஸ்
சிஎஸ்கே நிர்வாகமும் தலைமைகளும் ஒவ்வொரு வீரருக்கும் நட்போடு சேர்த்து ஒரு வித சுதந்திரத்தை கொடுப்பதாக பெங்களுரு அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
பொதுவாக இளம் வீரர் ஒரு அணிக்குள் நுழையும் போது அவருக்கு அது வித்தியாசமான உணர்வாக இருக்கும். அவர் சக வீரர்களுடனும் நிர்வாகத்துடனும் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்குள் ஓரு சீசனே முடிந்து விடும். ஆனால் சிஎஸ்கே என்னும் கூட்டத்திற்குள் ஒரு இளம் வீரர் நுழையும் போது அந்த முதல் நாளே அவருக்கு அனைத்து விதமான பிளேயர்களிடமும் சீனியர்களிடமும் தொடர்புகள் கிடைக்கின்றன. அத்தோடு ஒரு நட்பும், சுதந்திரமும் கிடைக்கிறது.
உதாரணத்திற்கு ஷிவம் டுபேவை எடுத்துக் கொண்டால் அவர் ஆர்சிபி வீரர்களிடையே அவ்வளவாக மிங்கிள் ஆனதே இல்லை. ஆனால் சிஎஸ்கேவில் ஒரு குடும்பமாக ஐக்கியமாகி விட்டார். அது அவரை உத்வேகப் படுத்தி இருக்கிறது. அதனால் தான் அவரின் முழுத்திறமை அவர் சிஎஸ்கேவில் இருக்கும் போது வெளிப்பட்டு இருக்கிறது என டிவில்லியர்ஸ் பேட்டி ஒன்றில் இருக்கிறார்.
“ ஒரு அணியின் வெற்றிக்கு பலமான வீரர்கள் தான் தேவை என்பது இல்லை, சரியான புரிதல்களும், வீரர்களுக்குள் நல்ல இணக்கமான நட்பும், தொடர்பும் இருந்தாலே போதும், ஒவ்வொரு வீரரின் முழுத்திறமை வெளிப்படும் என்பதற்கு சிஎஸ்கே ஆகச்சிறந்த உதாரணம் “