சொல்லி அடித்த மகேந்திர சிங் தோனி!
Dhoni Finishes Of In His Style IPL 2021 CSK VS SRH
ஐபிஎல் 2021-இன் 44ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை அதிரடியாக வீழ்த்தி முதல் அணியாக ப்ளே ஆப்-யிற்கு தகுதி பெற்று இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல்-லில் முதல் அணியாக சென்னை வெளியேறிய போது, தோனி சொன்ன வார்த்தைகள் ’நாங்கள் எப்படியும் இதிலிருந்து வலுப்பெற்று அடுத்த ஆண்டு அசைக்க முடியாத அணியாக உருவெடுத்து வருவோம்’ என்று கூறி இருந்தார். சொன்னது போலவே இந்த ஆண்டு முதல் அணியாக ப்ளே ஆப்-யிற்கு தகுதி பெற்று இருக்கிறது சென்னை.
ஆம் சொல்வதை தான் செய்வோம், செய்வதைத் தான் சொல்வோம் என்பது போல சொல்லி அடித்து பட்டையை கிளப்பி இருக்கிறார் மகேந்திர சிங் தோனி.
“ 19 ஆவது ஓவரின் நான்காவது பால், சித்தார்த் கவுல் வீசுகிறார், அந்த நேரத்தில் மூன்று பாலுக்கு இரண்டு ரன்கள் சென்னையின் வெற்றிக்கு தேவை, ’எங்க மிஞ்சி போனா ஒரு ரன் ஓடுவாரு’ என்று தோனி ரசிகர்களே, தோனியை குறைவிட்டு மதிப்பிட்ட போதும் , ஒரு விளாசு விளாசி பந்தை பறக்க விட்டு, 2011 சிக்ஸை கண் முன் கொண்டு வந்து நம்மை கண் கலங்க வைத்து விட்டார் மகேந்திரசிங் தோனி “
About Author
Auto Amazon Links: No products found.