ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி!
CSK VS DC IPL 2021 50th Match Starts Today
ஐபிஎல் 2021-இன் 50 ஆவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும்.முதல் இடம் என்னும் கீரிடத்தை தக்க வைத்துக்கொள்ள சென்னை அணியும், அதை அபகரிக்க டெல்லி அணியும் களத்தில் இறங்கும் போட்டி என்பதால் நிச்சயம் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.
‘எமனாய் இருந்தாலும் அவனுக்கு சமமாய் அமைவேன்’ என்று ஆக்ரோசமாக விளையாடும் சென்னை அணியின் ருத்ராஜ் கெய்க்வாட், அந்த பக்கம் கிட்ட தட்ட எமன்களாகவே இருக்கின்ற டெல்லியின் பந்து வீச்சு ஏவுகணைகள் ரபாடா, ஆன்ட்ரியூ நார்ட்ஜே, இது போக சுழலில் சுழற்றிப்போடும் அஸ்வின் மற்றும் அக்சர் படேல் என்று சென்னைக்கு ஈகுவலாக டெல்லி அணியும் பலம் பொருந்தியே இருக்கிறது.
“ ஐபிஎல்-இன் 50 ஆவது போட்டி, அது மட்டுமில்லாமல் இன்று ரிஷப் பன்ட்-இன் 24 ஆவது பிறந்த நாள், மேலும் முதல் இடம் என்னும் கீரிடத்திற்கு நடைபெறும் போட்டி என்பதால் எப்படியும் இன்றைய களத்தில் அனல் பறக்கும் என்பதை எதிர் பார்க்கலாம் “