ஐபிஎல் 2021 | கொல்கத்தா அணியை வென்றது சென்னை அணி!
ஐபிஎல் 2021-இன் 38 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா அணியை வென்று மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு அரியணை ஏறியது.
முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 171 ரன்களை எடுத்தது. சென்னை அணி தரப்பில் ஸ்ரதுல் தாகூர், வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரஸ்சல் என்று இரண்டு முக்கியமான விக்கெட்டுக்களை கைப்பற்றி கொடுத்தார். அதற்கு பின் ஆடிய சென்னை அணி கடைசி ஓவரின் கடைசி பாலில் இலக்கை அடைந்து திரில்லிங்காக வெற்றி பெற்றது.
சென்னை அணியின்தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி, டியூ பிளஸ்சிஸ் 43(30) ரன்களும், ருத்ராஜ் கெயிக்வாட் 40(28) ரன்களும் அணிக்கு எடுத்துக் கொடுத்தனர். அதற்கு பின் வரிசையாக விக்கெட்டுக்கள் சரிந்த நிலையில், கடைசி 12 பந்துகளில் சென்னையின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் களத்தில் நின்ற ஜடேஜா 19 ஆவது ஓவரில் பிரதிஷ் கிருஷ்ணா வீசிய பந்துகளில் இரண்டு சிக்ஸ், இரண்டு போர்கள் விளாசி சென்னையின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
“ பலம் வாய்ந்த இரண்டு அணிகள் மோதிய போட்டியில், டாக்டிக்சே வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசியில் ஜடேஜாவின் பலமே சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டது “