ஐபிஎல் 2021 | 53 ஆவது போட்டி | ராகுலின் அதிரடியில் பணிந்தது சென்னை அணி!
KL Rahul Fiery Innings Against CSK In 53th Match Of IPL 2021
ஐபிஎல் 2021-இன் 53 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்று இருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.
முதலில் ஆடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியில் டு பிளசிஸ் 76(55) தவிர பெரிதாய் யாரும் ஜொலிக்கவில்லை. அதற்கு பின் ஆடிய பஞ்சாப் அணி 13 ஓவர்களில் இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. பஞ்சாப் சார்பில் ராகுல் 98(42) ரன்கள் எடுத்து வெற்றிக்கு துணை புரிந்தார்.
தனிமனிதனாய் அணியை ஜெயிக்க வைத்திருக்கிறார் கே.எல்.ராகுல்.மேலும் இந்த போட்டியில் தோற்றதன் மூலம், முதல் இடம் என்ற அரியணையை தவற விட்டு இருக்கிறது சென்னை அணி. இருந்தாலும் இன்னமும் ப்ளே ஆப்யிற்குள் தான் இருக்கிறது சென்னை. பஞ்சாப் அணிக்கு இது ஒரு ஆறுதல் வெற்றி தான் . இதனால் அந்த அணியின் நிலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
“ ராகுல் அவர்களே இந்த பயர அப்படியே உள்ளுக்குள்ள வச்சிருங்க, டி20 உலக கோப்பை வருது அங்க வந்து பொளந்து கட்டுங்க “