ஐபிஎல் 2021 | ஹைதராபாத்தை வென்றது சென்னை அணி!
CSK Win Against SRH In 44th Match Of IPL 2021
ஐபிஎல் 2021-இன் 44 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வென்று முதல் அணியாக ப்ளே ஆப்-பிற்கு தகுதி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
முதலில் ஆடிய ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 134 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் சார்பில் சாஹா 44(46) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய சென்னை அணியினர் 19.4 ஓவர்களில் இலக்கை துரத்திப் பிடித்தனர். சென்னை சார்பில் ருதுராஜ் 45(38) ரன்களும், டியூ பிளசிஸ் 41(36) ரன்களும் எடுத்தனர்.
ஒட்டு மொத்தமாக போட்டியின் முடிவில் தற்போது புள்ளிப்பட்டிய்லில் சிஎஸ்கே யாரும் தொட முடியாத இடத்தில் தற்போது இருக்கிறது. அதாவது சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திலும், ஹைதராபாத் தொடர்ந்து கடைசி இடத்திலும் நீடித்து வருகிறது. 11 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணி, வெறும் இரண்டில் மட்டுமே தோல்வியைக் கண்டு யாரும் அசைக்க முடியாத அணியாக உருவெடுத்துள்ளது.
“ கடந்த வருடத்தில் இழந்ததை எல்லாம் இந்த வருடம் சென்னை அணி மொத்தமாய் மீட்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும் காரணம் இந்த சீசன் முழுக்க அத்தனை வெறியுடன் விளையாடி வருகிறது “