மும்பையை வென்று டாப் ஆப் த டேபிளுக்கு அரியணை ஏறிய சிஎஸ்கே!
இந்தியாவில் நிறுத்தப்பட்ட ஐபிஎல், ஐக்கிய அரபு அமீரகத்தில் மீள்ந்த நிலையில் முதல் போட்டியிலேயே மும்பையை அதிரடியாக வீழ்த்தியது மட்டுமில்லாமல் டேபிள் டாப்பிற்கு அரியணை ஏறியது சிஎஸ்கே.
மும்பை வெர்சஸ் சிஎஸ்கே என்றாலே, களத்தின் அனல் பறக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 24-4 என்று திணறிய போதும் ஒரு பக்கம் ருத்ராஜ் மும்பை அணியின் பந்து வீச்சை நாலா பக்கமும் சிதற விட்டுக்கொண்டிருந்தார். இறுதியாக சிஎஸ்கே 20 ஓவர்களின் முடிவில் 156/6 என்ற இலக்கை மும்பை அணிக்கு நிர்ணயித்தது. அதிகபட்சமாக ருத்ராஜ் 58 பால்களுக்கு 88 ரன்களை எடுத்தார்.
அதற்கு பின் ஆடிய மும்பை அணியில், திவாரியை தவிர யாரும் பேட்டிங்கில் ஜொலிக்காததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெறும் 136 ரன்களை மட்டுமே எடுத்து மும்பைதோல்வியைத் தழுவியது. நீண்ட நாளுக்கு பின் மீளும் ஐபிஎல்லின் முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் அனைவரின் பார்வையும் இந்த மேட்சின் மேல் இருந்தது. ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே இந்த மேட்ச் ஒரு பாதி ஒருபக்கம் மறு பாதி ஒரு பக்கம் என்று கடைசி வரை செல்லும் திரில்லராகவே அமைந்தது.
“ சிஎஸ்கே வெர்சஸ் மும்பை, என்னவோ தெரியவில்லை ஒரு இந்தியா வெர்சஸ் பாகிஸ்தான் மேட்சில் இருக்கும் அதே சுவாரஸ்யம் எதிர்பார்ப்பு இந்த இரண்டு அணிகள் விளையாடும் போதும் தொற்றிக் கொள்கிறது “