உலக கோப்பைக்கு உண்மையில் தயாராக தான் இருக்கிறதா இந்திய அணி?
மேற்கிந்திய தீவுகள் அணியுடன் எல்லாம் தோல்வியை எதிர்கொள்ளும் இந்திய அணியை பார்க்கும் போது, உலககோப்பைக்கு இந்திய அணி உண்மையில் தயாராக தான் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
உலககோப்பைக்கே தகுதி பெறாத அணிகளிடம் எல்லாம் இந்திய அணி தோற்கும் போது, நிச்சயம் இந்திய அணி உலககோப்பைக்கு தயாராக தான் இருக்கிறதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து இருக்கிறது. 100 நல்ல வீரர்கள் ஸ்குவாடில் இருக்கலாம். ஆனால் அதில் புரிதல் உள்ள 11 பேரை தேர்ந்தெடுத்து அணியை கட்டமைப்பதில் இந்திய அணி மிகவும் சிரமப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் நான்கு டூர்கள் வந்தாலும் கூட, நான்கையும் ஒரே நேரத்தில் அட்டண்ட் செய்யும் அளவுக்கு இந்திய அணியின் வீரர்கள் இருக்கிறார்கள் என்று ஹர்திக் ஒரு சமயம் கூறி இருந்தார். ஒவ்வொரு டூருக்கும் ஒவ்வொரு அணியை அனுப்பியதன் விளைவு தான் தற்போது உலககோப்பைக்கு ஒரு நிரந்தர அணியை தேர்வு செய்ய முடியவில்லை என்பது அவருக்கு புரியாது போல.
இதற்கு தான் தோனி ஒரே ஒரு அணியை கட்டமைத்து அதை மட்டும் வைத்துக் கொண்டே அனைத்து சீரிஸ்களிலும் விளையாடுவார். வெற்றியோ தோல்வியோ அடுத்தடுத்த சீரிஸ்களிலும் அதே அணியே நீடிக்கும். அப்போது அணிக்குள் நல்ல புரிதல் இருக்கும். ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனியே ஒரு பொறுப்பும் பில்ட் ஆகி விடும்.
“ ஆனால் இன்றைய பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் இதை செய்ய தவறுவதால் அணிக்குள் எந்த புரிதலும் இல்லை, வீரர்களுக்குள் எந்த பொறுப்பும் பில்ட் ஆகவில்லை. இஸ்டத்திற்கு விளையாடி விட்டு இஸ்டத்திற்கு தோற்று வருவது குறிப்பிடத்தக்கது “