CWC 2023 | Final | ‘ஆண்டை அணியான ஆஸ்திரேலியாவின் கோப்பை கனவை தகர்க்குமா இந்தியா?’
CWC 2023 Final Prediction India Facing Australia Tomorrow Idamporul
ஒரு நாள் போட்டி உலககோப்பையின் இறுதிப்போட்டியில் ஆண்டை அணியான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இருக்கிறது இந்திய அணி.
உலககோப்பை இறுதிப்போட்டியில் இதுவரை 5 முறை ஒரு நாள் போட்டி உலககோப்பையை வென்றிருக்கும் ஆண்டை ஆஸ்திரேலியா அணி, இரண்டு முறை உலககோப்பை வென்று இருக்கும் இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும்.
இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிபோட்டியை எட்டி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலிமையாக அணியாக திகழ்கிறது இந்திய அணி. வழக்கம் போல தனது அசத்தலான வியூகங்களால் இறுதிப்போட்டியை எட்டிப் பிடித்து இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. வெல்லப்போவது வலிமையா, வியூகமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
” இரண்டு வலுவான அணிகள் மோதப்போகும் களம் என்பதால் நாளை அகமதாபாத் ஸ்டேடியத்தில் அனல் பறக்கும் என்பதில் ஐயமில்லை “