CWC 2023 | Match No 16 | ‘இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது நியூசிலாந்து’
CWC 2023 Match No 16 Afghanistan Facing New Zealand Today Idamporul
ஐசிசி ஒருநாள் போட்டி உலககோப்பையின் 16 ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது நியூசிலாந்து அணி.
இன்று நடக்கவிருக்கும் ஐசிசி ஒருநாள் போட்டி உலககோப்பையின் 16 ஆவது லீக் போட்டியில், டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி, ஹஸ்மத்துல்லா தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.
“ நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி இருக்கும் ஆப்கானிஸ்தான், அதே உத்வேகத்துடன் நிச்சயம் நியூசிலாந்தை எதிர்கொள்ள இருக்கும், என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “