CWC 2023 | ’நியூசிலாந்து அணிக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் ஹர்திக் ஆடுவது சந்தேகம்?’
CWC 2023 Hardik Pandya Not Available For New Zealand Match Idamporul
நியூசிலாந்து அணிக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் ஹர்திக் ஆடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா காயமுற்றதை அடுத்து, நாளை நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்பது சந்தேகமாகி இருக்கிறது. அவருக்கு பதில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்பார் என கூறப்பட்டு வருகிறது. ஆனாலும் ஒரு சிறந்த ஆல்ரவுண்டரை இந்திய மிடில் ஆர்டர் நிச்சயம் மிஸ் செய்யும் என்பதில் ஐயமில்லை.
“ இதுபோக ஷர்துல் தாகூருக்கு பதில், ஷமி அல்லது அஷ்வினை அணியில் இணைக்கவும் செலக்டர்கள் பேசி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது “