CWC 2023 | Match No 28 | ’வங்க தேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து’
CWC 2023 Match No 28 NED VS BAN Netherland Won By 87 Runs Idamporul
உலககோப்பையின் 28 ஆவது லீக் போட்டியில் வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது நெதர்லாந்து.
முதலில் ஆடிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 229 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் எட்வர்ட்ஸ் 68(89) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய வங்கதேச அணி, நெதர்லாந்து அணியினரின் அபார பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 142 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
“ அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றிய, பால் வேன் மீக்கரன் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “