CWC 2023 | முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா’
நாளை நடக்க இருக்கும் முதல் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது இந்திய அணி.
ஒருநாள் போட்டிக்கான உலககோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும்.
ஐசிசி விளையாட்டுகள் என்றாலே நியூசிலாந்து அணிக்கு ஒரு புதிய புத்துணர்வு வந்து விடும். உலககோப்பைக்கு முன்னதான சீரிஸ் வரை சுமாராக விளையாடிக் கொண்டு இருந்த நியூசிலாந்து அணி, உலககோப்பை என்றதும் கேன் வில்லியம்சன் என்ற தலைமை இல்லாமல் கூட சில போட்டிகளை சிறப்பாகவே விளையாடியது.
இந்திய அணியை பொறுத்தவரை ஒரு நல்ல கலவை வந்து இருக்கிறது. பவுலிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி சிறப்பாக செயல்பட்டு அனைத்து லீக் போட்டிகளிலும் ஜெயித்து இருந்தது. போன உலககோப்பையின் முதல் அரையிறுதியின் போது நியூசிலாந்து அணி, 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை உடைத்தது, நிச்சயம் நாளை நடக்கும் போட்டியில் இந்திய அணி பழைய பகையை தீர்க்க பார்க்கும் என்பதில் ஐயமில்லை.
India Probable XI: Rohit Sharma (c), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul (wk), Suryakumar Yadav, Ravindra Jadeja, Mohammed Shami, Kuldeep Yadav, Jasprit Bumrah, Mohammed Siraj
New Zealand Probable XI: Devon Conway, Rachin Ravindra, Kane Williamson (c), Daryl Mitchell, Glenn Phillips, Tom Latham (wk), Mark Chapman, Mitchell Santner, Tim Southee, Trent Boult, Lockie Ferguson
“ இறுதிப்போட்டியை எதிர்கொள்ள இன்னும் ஒரே ஒரு போட்டி தான், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியை எந்த அணியுடன் இந்தியா எதிர்கொள்ள போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “