ஐபிஎல் 2021 | ஹைதராபாத்தை வென்றது டெல்லி அணி!

DC Win Against SRH IPL 2021 33 Match

DC Win Against SRH IPL 2021 33 Match

ஐபிஎல் 2021-இன் 33ஆவது போட்டியில் ஹைதராபாத் அணியை வென்றிருக்கிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

முதலில் ஆடிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெறும் 134 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதற்கு பின் ஆடிய டெல்லி அணி வெறும் இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 17.5 ஓவர்களில் இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 47(41) ரன்களை எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிபட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடத்தை அடைந்திருக்கிறது. முதலிடத்தில் இருந்த சென்னை தற்போது 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. ஹைதராபாத் அணி அதே ஒரு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

“ அது என்னவோ தெரியவில்லை ஹைதராபாத் மேட்ச் என்றாலே குறைந்த ஸ்கோர் மேட்சாகவே பெரும்பாலும் அமைகிறது. என்ன முந்தியெல்லாம் இந்த குறைந்த ஸ்கோரையும் ஹைதராபாத் அணி டிபெண்ட் செய்து விடும் தற்போது தோற்று விடுகிறது “

About Author