கோல்டன் ஸ்லாமை தவற விட்ட ஜோகோவிச் – ஒலிம்பிக் 2020
உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்விடம் அதிர்ச்சிகரமாக தோல்வியுற்றுள்ளார்.
கோல்டன் ஸ்லாமை வெல்லுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செர்பியாவின் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்விடம் 1-6,6-3,6-1 என்ற செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வியுற்றார். ஒரு வருடத்தில் நான்கு கிராண்ட்ஸ்லாம்கள் மற்றும் கோல்டன் கிராண்ட்ஸ்லாம் (ஒலிம்பிக் தங்கம்) என்ற சாதனையை 32 வருடங்களுக்கு முன்பு புரிந்த ஜெர்மனி வீராங்கனை ஸ்டெபி கிராப்பின் சாதனையை இந்த ஒலிம்பிக்கில் ஜோகோவிச் முறியடிப்பார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் அரையிறுதியில் ஜோகோவிச் வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
” ஒரே வருடத்தில் நான்கு கிராண்ட்ஸ்லாமை வென்று விட்டு கோல்டன் கிராண்ட்ஸ்லாமை உலகின் ஐந்தாம் நிலை வீரரிடம் தோற்று நழுவ விட்டிருப்பது வருத்தத்தை அளித்தாலும் ’யானைக்கும் அடி சறுக்கும்’ என்பது போல் கடந்து தான் ஆக வேண்டும் “