சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் முட்டாள் கேள்விகளை எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் – ரோஹிட் ஷர்மா

Dont Ask Chilly Social Media Questions To Me Rohit Idamporul
சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் கேள்விகளை எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் என ரோஹிட் ஷர்மா ப்ரஸ் மீட்டில் காட்டமாக தெரிவித்து இருக்கிறார்.
பிசிசிஐ தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் ரோஹிட் ஷர்மா இணைந்து உலக கோப்பைக்கான அணியை அறிவித்த போது, ரோஹிட் அவரிடம் அணி குறித்த கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அதற்கு ரோஹிட் ‘சமூக வலைதளங்களில் சில முட்டாள்கள் எழுப்பும் கேள்விகளை எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் என காட்டமாக பதிலளித்தார்’
“ ஆனாலும் சமூக வலைதளங்களில் பலரும் சரியாக தான் கேள்விகளை முன் வைக்கின்றனர், ஒட்டு மொத்தமாக அனைவரையும் முட்டாள் என்று சொல்வதெல்லாம் மிகப்பெரிய முட்டாள்தனம் என இணையவாசிகளும் பதிலடி கொடுத்து இருக்கின்றனர் “