IND A v PAK A | ‘அதிரடி காட்டிய தமிழக வீரர் சாய் சுதர்சன், வீழ்ந்தது பாகிஸ்தான்’
ACC Emerging Teams Asia Cup Match No 12 INDA V PAKA India Won By 8 Wickets Idamporul
தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருக்கிறது இந்திய A அணி.
எமர்ஜிங் ஆசிய கோப்பையின் பன்னிரெண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய பாகிஸ்தான் 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி சாய் சுதர்சன் 104(110) அதிரடியால் 36.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி பாகிஸ்தானை அதிரடியாக வீழ்த்தியது.
“ கடைசியாக ஐபிஎல்லில் பார்த்த சாய் சுதர்சன் இன்னும் அதே பார்மில் நீடிக்கிறார். வெகுவிரைவில் இந்திய அணியின் மெயின் ஸ்குவாடில் அவர் இடம்பிடிக்க வேண்டும் என்பதே தமிழக ரசிகர்களின் ஆசை “