இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி ஒய்வை அறிவித்தார்!
David Willey Retirement Announcement After CWC 2023 Idamporul
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக அறியப்படும் டேவிட் ஜோனதன் வில்லி, உலக கோப்பை முடிந்த பின், அனைத்து விதமான கிரிக்கெட் பார்மட்களிலும் இருந்து ஒய்வு பெறப்போவதாக அறிவித்து இருக்கிறார். இதுவரை 70 ஒரு நாள் போட்டிகள் விளையாடி இருக்கும் வில்லி 94 விக்கெட்டுக்கள் கைப்பற்றி இருக்கிறார்.
இங்கிலாந்து அணி முழுக்க முழுக்க சீனியர் பிளேயர்களின் கட்டமைப்பாக இருக்கிறது. இளைஞர்களை அழைத்து வாய்ப்பு கொடுக்காமல், ஓய்வு பெற்றவர்களை எல்லாம் திரும்ப அழைத்து விளையாட வைத்துக் கொண்டு இருக்கிறது. இந்த உலககோப்பையில் அவர்கள் கடைசி இடத்தில் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம்
” ஒவ்வொருவராக மீண்டும் ஓய்வு பெற்றுக் கொண்டு இருப்பதால் மீண்டும் இங்கிலாந்து அணி, தங்கள் அணியை கட்டமைப்பதற்குள் அடுத்த உலககோப்பையை வந்து விடும் போல “