இங்கிலாந்து அணியின் இந்த புன்முக வெற்றிக்கு மார்கனும் ஒரு விதத்தில் காரணம் தான்!
ICC T20 WC Final ENG vs PAK England Won By 5 Wickets
ஐசிசி டி20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி வென்றதற்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் மார்கனும் ஒரு விதத்தில் காரணம் தான்.
பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து டி20 உலக கோப்பையை கைப்பற்றியது. தன்னால் தன் அணிக்கு ஒரு இறக்கம் இருக்கிறது என்பதை உணர்ந்து தானாகவே கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி அணிக்கு வழிவிட்ட முன்னாள் கேப்டன் மார்கனும் இங்கிலாந்தின் இந்த வெற்றிக்கு ஒரு காரணம் தான்.
“ அணிக்காக ஒரு வீரர் தன் சுயநலத்தை விட்டு கொடுப்பது என்பது உண்மையில் பெரிய விடயம், அந்த வகையில் மார்கன் தன்னை விடுவித்து தன் நாட்டின் கோப்பை கனவுக்கு வழு கொடுத்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் “