பிரபல கால்பந்தாட்ட வீரர் பீலே உடல்நலக்குறைவால் காலமானார்!
Brazilian Foot Baller Pele Dies At 82 Idamporul
பிரேசிலின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரராக அறியப்படும் பீலே (82) உடல்நலக்குறைவால் காலமானார்.
பிரேசில் அணிக்கு மூன்று முறை உலககோப்பையை வாங்கி தந்த பிரபல நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் பீலே (82) உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். சில வருடங்களாகவே கேன்சருடன் அவர் போராடிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது நோயின் தாக்கம் முற்றவே அவர் இந்த சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
“ மெஸ்சி, ரொனோல்டோ, நெய்மர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பீலேவுக்கு நேரடியாகவும் இணையத்தின் மூலமாகவும் உருக்கமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர் “